Success in my Habit

Saturday, November 19, 2022

புதுமனை புகு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டபோது..




JB Group அலுவலர் வளர்மதி -நிலவழகன் அவர்களின் புதுமனை புகு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டபோது..

 

உலக மூல தினத்தை முன்னிட்டு Prime Indian Hospital மற்றும் சென்னை தமிழ்நாடு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் நல சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் "Mini Marathon" நடைபெற்றது.




உலக மூல தினத்தை முன்னிட்டு Prime Indian Hospital மற்றும் சென்னை தமிழ்நாடு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் நல சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் "Mini Marathon" நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராச்சாமி அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கொடியசைத்து விழாவினை துவக்கி வைத்தார். அவரை கௌரவிக்கும் விதமாக தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பாக பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்து மரியாதை செய்தனர்.

இரும்பு பெண்மணி அன்னை இந்திரா காந்தி அவர்களின் பிறந்தநாள் இன்று.


முன்னாள் பாரத பிரதமர், இந்தியாவின் இரும்பு பெண்மணி அன்னை இந்திரா காந்தி அவர்களின் பிறந்தநாள் இன்று. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக அவரின் நினைவு கூர்வோம்! போற்றி வணங்குவோம்!

Thursday, November 17, 2022

'செக்கிழுத்த செம்மல்' வ.உ.சிதம்பரனாரின் 86வது நினைவு நாள் இன்று.


நாம் விடுதலைக் காற்றை சுவாசிப்பதற்காக தனது சொத்து சுகங்களையெல்லாம் இழந்து பாடுபட்ட 'செக்கிழுத்த செம்மல்' வ.உ.சிதம்பரனாரின் 86வது நினைவு நாள் இன்று. தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக அவர் ஆற்றிய சேவை போற்றுவோம் புகழ்வோம்!

பாலகிருஷ்ணன் தொண்டு நிறுவனம் மற்றும் TNDWWA சார்பாக புற்றுநோய் நோயாளிகளுக்கு 150 கிலோ அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டது !!




ஜெயலக்ஷ்மி பாலகிருஷ்ணன் அம்மையார் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பாலகிருஷ்ணன் தொண்டு நிறுவனம் மற்றும் TNDWWA சார்பாக புற்றுநோய் நோயாளிகளுக்கு 150 கிலோ அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டது !!