Success in my Habit

Friday, October 30, 2020

 



“தெய்வத் திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்” அவர்களின் 113-வது பிறந்தநாள் மற்றும் 58வது குருபூஜையில் அவரை போற்றி வணங்குவோம்! தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்க துணை தலைவர் திரு. T. R. மாதேஸ்வரன் அவர்கள் சங்க உறுப்பினர்களுடன் சென்னை நந்தனம் பகுதியில் உள்ள திரு.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை சமர்ப்பித்தார் !

உலகத்தில் எத்தனையோ உத்தமர்கள் தோன்றினார்கள். ஆனால் 20 ஆம் நுற்றாண்டில் உணர்ச்சிகளை உள்ளடக்கி தியாகத்தை வெளிப்படுத்தி மனோதத்துவம் என்பதை ஏற்படுத்தி தெய்வீகத்தையும் தேசியத்தையும் ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி துல்லியமாக தனது பாதை விலகாது நடந்தவர் முத்துராமலிங்கத் தேவர் ஆவார். அவரைத் தவிர மற்றையோர் யாரும் இன்னும் பிறந்து வரவும் இல்லை; இனிமேல் பிறக்கவும் முடியாது.

இந்துவின் வயிற்றிலே பிறந்து முஸ்லிம் மடியில் தவழ்ந்து கிருஸ்துவரின் அரவணைப்பிலே கல்வி கற்று பாரத நாட்டின் விடுதலை போரில் விடுதலை தளபதியாய் விளங்கியவர்.
விவேகானந்தரின் தாசராகவும் நேதாஜியின் நேசராக, நேர்மையின் துதராக, சத்தியத்தை சீடராக விளங்கியவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர். அவர் வார்த்தை பிறழாது நடக்கக்கூடியவர். திடமானவர், நெறியாளர், திட வைராக்கிய மெய்ஞானி, திறமைமிகு தியாகச்சுடர், தீரமிகு அரசியல் தீர்க்கதரிசியாவார்.

வெண்மை நிறங்கொண்டு உடையளவில் மட்டுமல்லாது மனதளவிலும் விளங்கியவர். மன்னராக இல்லாமலும் மன்னராக விளங்கினார்.’பசும்பொன்’ என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு. ஒன்று பசும்பொன் என்றால் சுத்தமான தங்கத்தைக் குறிக்கும்.மற்றொன்று பசும்பொன் என்றால் தேவர்த்திருமகனாரையே குறிக்கும்.

திருமகனார் அவர்கள் தமிழகம் உயர தமிழ் வளர.. தமிழ்ச்சமுதாயம் உயர போராட்டக்கல்லில் உரசி உரசி மக்களுக்காக அழைத்திருக்கிறார். பாடுபட்டிருக்கிறார். சேது வேங்கை என்றும் அழைக்கப்படுவார்.

அனைத்து தரப்பு மக்களையும் அன்புடன் அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையை நெஞ்சில் சுமந்து தன் வாழ்நாள் முழுவதும் அதற்காக உழைத்தவர், பாடுபட்டவர். அப்படிப்பட்ட தேவர் பெருமகனாரின் வாழ்க்கை வரலாறு இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை.


No comments: