அமைதியும் செழிக்கட்டும் !!!
அரபு நாட்டில் வாழ்ந்த மக்களின் நிலை மிக மோசமாக இருந்தது. அவர்களின் பழக்க வழக்கங்கள் மிகக் கொடூரமாகவும் மனித தன்மையற்று இருந்தது. அவர்களைச் சீர்படுத்த அல்லாஹ்வால் அனுப்பப்பட்டவரே நபிகள் நாயகம்.
இவர் கி.பி 570 ரபியுல் அவ்வல் மாதம் 12ம் தேதி பிறந்தார். இவர் பிறக்கும்போதே இவரது தந்தை இறந்துவிட்டார். இவரது 6வது வயதில் தாய் காலமாகிவிட்டார். இந்நிலையில் இவர் அவதரித்த மெக்கா நகரில் இவரது பாட்டனார் ஹஜ்ரத் அப்துல் முத்தலிப்பின் பாதுகாப்பில் வளர்ந்தார். இவர் 40வது வயதில் இவரைத் தனது தூதராக அல்லாஹ் அறிவித்ததாகக் கூறப்படுகிறது.
அப்பொழுது இவர் : "நம் வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவரே. நான் அவனுடைய தூதனாக இருக்கிறேன்" என அறிவித்தார். ஆனால் மக்கள் அதை நம்பாமல் அவரை துன்புறுத்தினர். ஒரு கட்டத்தில் மெக்காவிலிருந்து மதினா சென்று அங்கிருந்து போர்புரிந்து மக்களை மெக்கா நகர மக்களை இஸ்லாமை ஏற்க வைத்தார்.
இவர் கிபி 632ம் ஆண்டு ரபியுள் அவ்வல் மாதம் 12ம் தேதி இந்த உலகை விட்டு மறைந்தார். ஆம் இவர் பிறந்த தினமும் இறந்த தினமும் ஒரே நாள் தான் இந்த நாளையே நாம் மிலாடி நபி நாளாகக் கொண்டாடுகிறோம்.
No comments:
Post a Comment