சென்னையில் பிரபல தொழில் நிறுவனமான இன்னொகைஸ் இந்தியா நிறுவனமானது ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் கீழ் கடந்த 18 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந் நிறுவனத்தின்
ஒரு அங்கமாக பாலகிருஷ்ணன் பவுண்டேசன் கடந்த 10 ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களின் வறுமையே போக்கும் நோக்கிலும், வறுமையில் வாடும் ஏழை குழந்தைகளின் கல்வி வளர்ச்சி மற்றும் ஏழை மாணவர்களின் கல்வி
மேற்படிப்பு செலவிற்காகவும் உதவும் வகையில் நல்ல நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது.
இதன் நிர்வாக இயக்குனராகவும், நிறுவன தலைவராகவும் திரு. சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் இருந்து
வருகிறார்.ஏழைகளின் துயர் துடைக்கும் தூய உள்ளம் கொண்ட திரு.சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இந்த நற்சேவைகளை பாலகிருஷ்ணன் பவுண்டேசன் என்ற அறக்கட்டளையின் மூலம் செய்து வருகிறார்.
சமீபத்தில் மதுரையில் பன்னிரண்டாவது வகுப்பில் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவர் மற்றும் மாணவியின் கல்வி மேற்படிப்பிற்காக ரூ.10000 வீதம் நான்கு பேருக்கு ரூபாய் 40,000 அ.இ.அ.தி.மு.க மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் அவர்கள் முன்னிலையில் பாலகிருஷ்ணன் பவுண்டேசன் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது.
இச்செய்தியினை யுகம் செய்தி இணையதளத்தில் பதிவிட்ட நிருபர் ராஜ்குமார் அவர்களுக்கு நன்றியே தெரிவித்து கொள்கிறோம்.
#SUKUMARBALAKRISHNAN #BALAKRISHNANFOUNDATION #INNOKAIZ #MLASARAVANAN #HelpedtoPoorStudent #MADURAISTUDENTS #ThanksYugamNews