Success in my Habit

Monday, September 19, 2022

ஆவடி வள்ளலார் பசியாற்றும் மையத்தில் இன்று(19-09-2022) சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது....

 






Day 1 - ஜெயலக்ஷ்மி பாலகிருஷ்ணன் அம்மையார் அவர்களின் 66_வது பிறந்தநாளை முன்னிட்டு TNDWWA மற்றும் Balakrishnan Foundation இணைந்து ஆவடி வள்ளலார் பசியாற்றும் மையத்தில் இன்று( 19-09-2022) சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது....














Sunday, September 18, 2022

Happy Birthday Amma 💐💐🎂🎂


Happy Birthday Amma 💐💐🎂🎂🎉😭

#Madura_College மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது.





தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக மதுரை மாவட்ட தலைவர் திரு.ராஜ் அவர்களின் தலைமையில் என் எம் சி சி நிறுவனம் நடத்தும் முதலாம் ஆண்டு கிரிக்கெட் திருவிழா #Madura_College மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பரிசளிப்பு விழாவை சிறப்பு செய்தனர்.🙏🙏💐💐

Saturday, September 17, 2022

தந்தை பெரியார் அவர்களின் 144_வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.





இன்று பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 144_வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பாக சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள பெரியார் திடலில் உள்ள நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின் சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் இணைந்து சமூகநீதி நாளான இன்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

#SUKUMARBALAKRISHNAN #பெரியார் #Periyar #periyarbirthday #Periyar144 #tndwwa #metropeople

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு #TNDWWA சார்பாக பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.


இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடும் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக நல்ல உடல்நலத்தோடும் நீண்ட ஆயுளோடும் பொதுப்பணியை தொடர்ந்திட உளம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

#HappyBirthdayModiji #india #indiaprimeminister #tndwwa #Metropeople

தந்தை பெரியார் பிறந்த நாள் இன்று!!


சாதிய ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை கொடுமைகளை மத வேறுபாடுகளை உதறித்தள்ளி, பெண்களை சமநிலையில் மதிக்கும் கொள்கையை உருவாக்கிய தந்தை பெரியார் பிறந்த நாள் இன்று!!

ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.



#tndwwa சங்கத்தின் சார்பாக இருங்காட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சங்கத்தின் சார்பாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது

Friday, September 16, 2022

சென்னை நுங்கம்பாக்கத்தில் மூன்று இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.




உலக வெப்பமயமாதலை தடுக்கும் பொருட்டு இன்று ஓசோன் தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

இனி ஒரு விதி செய்வோம் திரைத்துறை அமைப்பின் நிறுவனர் தமிழ்நாட்டில் 50000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பல்வேறு படங்களில் நடித்த V. செந்தில் குமார் அவர்கள் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்துடன் இணைந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் மூன்று இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

Thursday, September 15, 2022

கா.ந.அண்ணாதுரை அவர்களின் 114 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா




காஞ்சித் தலைவன் பேரறிஞர் பெருந்தகை கா.ந.அண்ணாதுரை அவர்களின் 114 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக வாகன ஓட்டுனர்கள் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் அன்னாரின் திருவுருவப் படத்திற்கு சென்னை மாவட்ட தலைவர் திரு.குமார் அவர்களின் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.