Success in my Habit

Saturday, November 7, 2020

அமைச்சர் திரு. மாஃபா க.பாண்டியராஜன் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்த பொழுது

 


திருமதி. ஜெயலட்சுமி அம்மாள் அவர்களின் 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வருகிற 9–ந் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள R K மஹாலில் பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக ஏழை எளிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

இந்த இனி நிகழ்ச்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாண்புமிகு அமைச்சர் திரு. மாஃபா க.பாண்டியராஜன் அவர்களை நம் தலைவர் திரு. சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் நேரில் சந்தித்து சிறப்பு விருந்தினராக அழைத்த பொழுது.


Tuesday, November 3, 2020

அம்மா அவர்களின் 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஸ்ரீபெரும்புதூரில்ஏழை குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி...!!!


 


பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக ஜெயலட்சுமி அம்மாள் அவர்களின் 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஸ்ரீபெரும்புதூரில் ஏழை குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

4 ஆம் ஆண்டு நினைவு நாளில் அம்மாவை நினைவுகூறும் வகையில்,


தமிழகத்தில் 10 இடங்களில்,

  • 1200 கிரேடு 1 அரிசி மூட்டை
  • 1200 சேலை / வேட்டி
  • 1200 நல்ல தரமான உணவு
போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட உள்ளது.

Sunday, November 1, 2020

தமிழ் நாடு தினம்


 உலக தமிழர்கள் அனைவருக்கும் !

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக தமிழ் நாடு தினம் நல்வாழ்த்துக்கள்!
"தமிழ் நாடு இது தான் எங்கள் தமிழகம்!உலகிற்கே ஒளியை ஏற்றி உயிர் கொடுக்கும் எங்கள் தமிழகம்!"

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம்” என்று தொல்காப்பியம் கூறியுள்ளது என்ற போதிலும், தமிழ்நாடு என்ற நிலப்பரப்பு முழுதாக எப்போதாவது ஒரே தமிழ் அரசனின் கீழ் ஆளப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு பதில் சொல்வது சிரமம். ஏனெனில், இது சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்கள் ஆண்ட பூமியாகும். அன்னியப் படையெடுப்புகளால் இந்த நிலப்பரப்பு கூறுபோடப்பட்டு, சிலகாலங்கள் சிலரால் ஆளப்பட்ட போதிலும் கூட, வேற்று மொழியினரான தெலுங்கர்கள், மராட்டியர்கள், சவுராஷ்டிரத்தினர் என பலர் வந்து குடியேறி ஆட்சி அதிகாரம் செய்த காலத்திலும் கூட, இந்த மண்ணில் வாழும் பூர்வகுடிகள் ‘தமிழ்நாடு’ என்ற உணர்வை ஒரு போதும் இழக்கவில்லை.



மொழிவாரி மாநிலங்கள் தேவையா? என்பதற்கு முதன் முதலாக எஸ்.கே.தார் கமிட்டி ஜூன் 1948-ல் அமைக்கப்பட்டது. அது தன் அறிக்கையை அதே ஆண்டு டிசம்பர் மாதம் சமர்ப்பித்தது. அதில், “மொழிவாரி மாநிலம் அவசியமில்லை. நிர்வாக வசதிக்கு ஏற்பத்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும்” என்று அது பரிந்துரைத்திருந்தது. காங்கிரஸ் கட்சிக்குள் இதற்காக உருவாக்கப்பட்ட ஜவகர்லால் நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சீதாராமையா என்ற மூவர் கமிட்டியும் இதே கருத்தைத்தான் வலியுறுத்தியது.

“இந்திய சுதந்திரத்திற்காக நாம் ஒன்றுபட்டு போராடினோம். அப்படி ஒன்றுபட்ட நாம் மொழிவாரியாக நம்மை ஏன் பிரித்துக் கொள்ளவேண்டும். மொழி உணர்வும், பிராந்திய உணர்வும் நம் ஒற்றுமையை குலைத்துவிடக்கூடாது. ஆகவே, இந்தியாவை நிர்வாக வசதி கருதி பிரித்து, அனைத்து பிரிவினரும் சமஉரிமை பெறும் வகையில் மாநிலங்களை உருவாக்கலாம்” என்றார் ஜவகர்லால் நேரு.

இந்த விஷயத்தில், சட்டமேதை அம்பேத்கரோ, “மொழிவாரி மாநிலம் என்பது தவிர்க்கமுடியாது. ஆனால், அதை முரட்டுத்தனமாகவோ, நிர்ப்பந்தமாகவோ உருவாக்கக் கூடாது. மொழிவாரியாக மாநிலங்களை பிரிப்பதில் சில ஆபத்துகளும் உள்ளன. மொழி உணர்வை கட்சிகள் அரசியல் ஆதாயங்களுக்கு பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. பிரிவினை உணர்வை தவிர்ப்பதற்கும், மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கும் ஒரு தேசிய மொழியை ஆட்சி மொழியாக்க வாய்ப்புள்ளதா..? என்று பார்க்கவேண்டும்.” என்றார்.

தேசத் தலைவர்களின் கருத்தும், அதைத் தொடர்ந்து தார் கமிட்டி பரிந்துரையும் தெலுங்கு பேசும் மக்களை கொந்தளிக்க வைத்தது. போட்டி ஸ்ரீராமுலு என்ற காந்தியவாதி ஆந்திர மாநில கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். 1952 ஜூன் 9-ல் ஆரம்பித்து செப்டம்பர் 15-ல் அவர் தன் உயிரை நீத்தார். அவரது உண்ணாவிரதமும், அதைத் தொடர்ந்த மரணமும் தெலுங்கு மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி, பல கலவரங்களுக்கு வித்திட்டது. கட்டுப்படுத்தவியலாத கலவரங்களையடுத்து, 1953 அக்டோபர் 1-ந்தேதி ஆந்திரா சுதந்திர இந்தியாவின் முதல் மாநிலமாக உண்டானது. இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பசல்அலி தலைமையில் மாநில மறுசீரமைப்பு கமிட்டியை பிரதமர் நேரு ஏற்படுத்தினார். இச்சூழலில், “மதராஸ் மனதே” என்ற கோஷத்தை எழுப்பி, “சென்னையை ஆந்திராவின் தலைநகராக்க வேண்டும்” என்றனர், தெலுங்கு மக்கள்!


ஆந்திரா கோரிக்கைக்கும் முன்பே 1938-லேயே சென்னை கடற்கரையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில், மறைமலையடிகள், தந்தை பெரியார், சோமசுந்தரபாரதியார் ஆகியோர் “தமிழ்நாடு தமிழனுக்கே” என்ற முழக்கத்தை எழுப்பி இருந்தனர். அதே காலகட்டத்தில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. தமிழ் மாநிலம் வேண்டும் என்று மாநாடுகள் நடத்தி வலியுறுத்தி வந்தார். ஆந்திரா உருவானதையடுத்து தமிழ்நாடு கோரிக்கையோடு சென்னையை காப்பாற்ற வேண்டிய அவசர அவசியமும் உண்டானது. “தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம்” என்ற முழக்கத்தை ம.பொ.சி. பிரபலப்படுத்தினார். ராஜாஜியோ, “சென்னையை ஆந்திராவிற்கு தந்துவிட்டால், அதற்கு ஒத்துழைப்பு தரும் சக்தி எனக்கில்லை. நான் ராஜினாமா செய்துவிடுவேன். நீங்கள் வேறு முதல்வரை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்” என்று நேருவிடம் கூறிவிட்டார். இதையடுத்து “சென்னையை ஆந்திராவிற்கு தரப்போவதில்லை” என நேரு பகிரங்கமாக அறிவித்தார்.

மொழிவாரி மாநில போராட்டத்தில் தெலுங்கு மக்கள் ‘விசால ஆந்திரா’ என்றும், கன்னட மக்கள் ‘அகண்ட கர்நாடகம்’ என்றும், மலையாளிகள் ‘ஐக்கிய கேரளா’ என்றும், மராட்டிய மக்கள் ‘சம்யுக்த மகாராஷ்டிரம்’ என்றும், குஜராத்தியினர் ‘மகா குஜராத்’ என்றும் கேட்டுப் போராடினர். மொழிவாரி மாநில அறிவிப்பு 1956 நவம்பர் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களும், 6 யூனியன் பிரதேசங்களும் உருவானது. மற்ற மாநிலத்தவர்களுக்கு எல்லாம் அவர்கள் விரும்பிய பெயரே அந்தந்த மாநிலங்களுக்கு சூட்டப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டிற்கு மட்டும் ‘மதராஸ்’ என்ற பெயரே மாற்றமின்றி தொடரும் என்றானது. ஆனால், தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் என்ற கோரிக்கையும், போராட்டங்களும் தொடர்ந்து தமிழகத்தில் நடந்தது. இந்த வகையில் தமிழ்நாடு பெயர் கோரிக்கைக்காக விருதுநகரில் சங்கரலிங்கம் என்ற 76 வயது தமிழ் போராளி 78 நாட்கள் தொடர்ந்து மனஉறுதியுடன் உண்ணாவிரதமிருந்து தன் இன்னுயிரை நீத்தார். அவரது தியாகம் வீண்போகவில்லை. அறிஞர் அண்ணா முதல்-அமைச்சராக பதவியேற்று 1967-ம் ஆண்டு ஜூலை 18-ல் மதராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார்.

Saturday, October 31, 2020

வேளாண் துறை அமைச்சர் திரு. துரைக்கண்ணு...

 

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக தமிழக வேளாண் துறை அமைச்சர் திரு. துரைக்கண்ணு அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மற்றும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Friday, October 30, 2020

 



“தெய்வத் திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்” அவர்களின் 113-வது பிறந்தநாள் மற்றும் 58வது குருபூஜையில் அவரை போற்றி வணங்குவோம்! தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்க துணை தலைவர் திரு. T. R. மாதேஸ்வரன் அவர்கள் சங்க உறுப்பினர்களுடன் சென்னை நந்தனம் பகுதியில் உள்ள திரு.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை சமர்ப்பித்தார் !

உலகத்தில் எத்தனையோ உத்தமர்கள் தோன்றினார்கள். ஆனால் 20 ஆம் நுற்றாண்டில் உணர்ச்சிகளை உள்ளடக்கி தியாகத்தை வெளிப்படுத்தி மனோதத்துவம் என்பதை ஏற்படுத்தி தெய்வீகத்தையும் தேசியத்தையும் ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி துல்லியமாக தனது பாதை விலகாது நடந்தவர் முத்துராமலிங்கத் தேவர் ஆவார். அவரைத் தவிர மற்றையோர் யாரும் இன்னும் பிறந்து வரவும் இல்லை; இனிமேல் பிறக்கவும் முடியாது.

இந்துவின் வயிற்றிலே பிறந்து முஸ்லிம் மடியில் தவழ்ந்து கிருஸ்துவரின் அரவணைப்பிலே கல்வி கற்று பாரத நாட்டின் விடுதலை போரில் விடுதலை தளபதியாய் விளங்கியவர்.
விவேகானந்தரின் தாசராகவும் நேதாஜியின் நேசராக, நேர்மையின் துதராக, சத்தியத்தை சீடராக விளங்கியவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர். அவர் வார்த்தை பிறழாது நடக்கக்கூடியவர். திடமானவர், நெறியாளர், திட வைராக்கிய மெய்ஞானி, திறமைமிகு தியாகச்சுடர், தீரமிகு அரசியல் தீர்க்கதரிசியாவார்.

வெண்மை நிறங்கொண்டு உடையளவில் மட்டுமல்லாது மனதளவிலும் விளங்கியவர். மன்னராக இல்லாமலும் மன்னராக விளங்கினார்.’பசும்பொன்’ என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு. ஒன்று பசும்பொன் என்றால் சுத்தமான தங்கத்தைக் குறிக்கும்.மற்றொன்று பசும்பொன் என்றால் தேவர்த்திருமகனாரையே குறிக்கும்.

திருமகனார் அவர்கள் தமிழகம் உயர தமிழ் வளர.. தமிழ்ச்சமுதாயம் உயர போராட்டக்கல்லில் உரசி உரசி மக்களுக்காக அழைத்திருக்கிறார். பாடுபட்டிருக்கிறார். சேது வேங்கை என்றும் அழைக்கப்படுவார்.

அனைத்து தரப்பு மக்களையும் அன்புடன் அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையை நெஞ்சில் சுமந்து தன் வாழ்நாள் முழுவதும் அதற்காக உழைத்தவர், பாடுபட்டவர். அப்படிப்பட்ட தேவர் பெருமகனாரின் வாழ்க்கை வரலாறு இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை.


Thursday, October 29, 2020

 


தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் 
நல சங்கம் சார்பாக இனிய மிலாடி நபி நல்வாழ்த்துக்கள் !
அனைவர் இல்லங்களில் அன்பும் !!!
அமைதியும் செழிக்கட்டும் !!!

அரபு நாட்டில் வாழ்ந்த மக்களின் நிலை மிக மோசமாக இருந்தது. அவர்களின் பழக்க வழக்கங்கள் மிகக் கொடூரமாகவும் மனித தன்மையற்று இருந்தது. அவர்களைச் சீர்படுத்த அல்லாஹ்வால் அனுப்பப்பட்டவரே நபிகள் நாயகம்.

இவர் கி.பி 570 ரபியுல் அவ்வல் மாதம் 12ம் தேதி பிறந்தார். இவர் பிறக்கும்போதே இவரது தந்தை இறந்துவிட்டார். இவரது 6வது வயதில் தாய் காலமாகிவிட்டார். இந்நிலையில் இவர் அவதரித்த மெக்கா நகரில் இவரது பாட்டனார் ஹஜ்ரத் அப்துல் முத்தலிப்பின் பாதுகாப்பில் வளர்ந்தார். இவர் 40வது வயதில் இவரைத் தனது தூதராக அல்லாஹ் அறிவித்ததாகக் கூறப்படுகிறது.

அப்பொழுது இவர் : "நம் வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவரே. நான் அவனுடைய தூதனாக இருக்கிறேன்" என அறிவித்தார். ஆனால் மக்கள் அதை நம்பாமல் அவரை துன்புறுத்தினர். ஒரு கட்டத்தில் மெக்காவிலிருந்து மதினா சென்று அங்கிருந்து போர்புரிந்து மக்களை மெக்கா நகர மக்களை இஸ்லாமை ஏற்க வைத்தார்.

இவர் கிபி 632ம் ஆண்டு ரபியுள் அவ்வல் மாதம் 12ம் தேதி இந்த உலகை விட்டு மறைந்தார். ஆம் இவர் பிறந்த தினமும் இறந்த தினமும் ஒரே நாள் தான் இந்த நாளையே நாம் மிலாடி நபி நாளாகக் கொண்டாடுகிறோம்.

INNOKIAZ Proudly Launching iTIRTA Video Teaser 2.0




iTirta, Water Management Company Offering end-to-end Solutions for Water Management and Water Supplies with 17+ Years of Business Experience in Innokaiz and Jayalakshmi Balakrishnan Group. Matching up with the exact requirements of customers, We are involved in presenting wide array of Purified Drinking Water. We are providing Purified Drinking Water Under the guidance of experienced professionals, the offered water is processed hygienically with the industry set guidelines. Apart from this, this purified drinking water is packed properly for safe dispatch at the clients' end.

We Offered Wide Range of Varieties:

  • Bottled Water

  • 20L, 5L, 1L, 500ml and 300ml Bottles.

Water Supply :

  • Tank Capacity 12000 Ltr and 24000 Ltr.

  • All Tanks are EPI Coated.

  • For Industrial / Residential / Hotel etc.

Contact:

Email : itirta.info@gmail.com, itirta.marketing@gmail.com
Mobile No : +91 87544 44928 / +91 96770 76888


Visit Our link for more details:

https://youtu.be/FffrUbtH88M


Monday, October 26, 2020

AYUDHA POOJA CELEBRATION AT INNOKAIZ OFFICE

 


 


INNOKAIZ INDIA PRIVATE LIMITED celebrated ayudha pooja celebration in chennai head office at October 25th, Saturday 2020. Followed by the celebration Function we presented a ayudha pooja special gifts for all the Employees & Special Guest's.

Ayudha pooja is one of the most significant religious festival occur during nine days of navraatri. This festival is basically celebrate in Kerala, Karnataka and Tamil Nadu. This festival is occur in the ninth day of sharad navraatri in this festival. It's also known as ashtra puja, which means worship of instruments. Ayudha pooja is generally a religious part or dashara, durga pooja and golu festival in India. In this day all type of instruments, equipment's and tools are worshipped.

Tuesday, October 20, 2020

சங்கத்தில் இணைவீர்...!!! பயன் பெறுவீர்...!!!

 


தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலசங்கம் பல்வேறு நன்மைகள் மற்றும் உரிமைகளை தொழிலாளர்களுக்கு பெற்று தருவதில் முன்னோடியாக திகழ்கிறது.

நம் நலசங்கம் தொடங்கி 10 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவு செய்து 11-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி சங்கத்தில் புது உறுப்பினர்களை சேர்க்கும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நம் நலசங்கத்தில் பல லட்ச உறுப்பினர்களுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நம் நலசங்கத்தில் உறுப்பினராக இணைவதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் நன்மைகளை பெறுகின்றனர்.

சங்கத்தில் இணைந்து உறுப்பினராகி பயன்களை பெற உடனே மிஸ்டு கால் கொடுக்கவும் : 

+91 90030 56664

சங்கத்தில் இணைவீர்...!!! பயன் பெறுவீர்...!!!


Saturday, October 17, 2020

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக வாழ்த்து செய்தி ! அதிமுக 49வது ஆண்டு தொடக்க விழா...!

 


நமது தோழமை கழகமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று 49-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. மேலும் கழக பொன்விழா ஆண்டிலும் கழக ஆட்சியை மென்மேலும் தொடர தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் !!!